அலர்ட்! அடுத்த 3 மணி நேரம்.. நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, கடலூர் உள்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காக்காச்சி, ஊத்து ஆகிய பகுதிகளில் 16 செ.மீ மழை பெய்தது. இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடியிலும், கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

இந்த நிலையில், இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 1 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது காலை 10 மணி வரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது காலை 10 மணி வரை கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய 9 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications