சென்னையில் ஒரே ஆச்சரியம்.. டைடல் பார்க் சிக்னல்ல.. விருந்தாய் வந்த "விருந்தாளி".. யார்னு பாருங்க.. ஆ
சென்னை: சென்னையின் சாலைகளில் முதலைகள் வாக்கிங் சென்று ஷாக் தந்துபோலவே, இப்போது இன்னொரு ஆச்சரியமும் நடந்துள்ளது. அதுவும் டைடல் பார்க் சிக்னலில்..!
நேற்றைய தினம், சென்னையை ஒரு புரட்டு புரட்டிபோட்டுவிட்டு போய்விட்டது இந்த நிக்ஜாம்.. கிட்டத்தட்ட தனி தீவு போல காட்சியளித்தது.. ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள், நீரில் மூழ்கிவிட்டன..

மழைநீர்: ஒரு ஏரியாவில் இருந்து இன்னொரு ஏரியாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது... மரங்கள் சாய்ந்து விழுந்தன.. குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்துவிட்டது..
வழக்கமாக, மழை வந்தால், தாழ்வான பகுதிகளுக்கு மழைநீர் பாய்ந்து சென்றுவிடும். ஆனால், இந்த முறை, மேடான பகுதிகளிலும் மழைநீர் புகுந்துவிட்டதால், சென்னைவாசிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். சென்னையின் பிரதான சாலைகளிலுமே, இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நின்றது.. வாகனங்களும் நகர முடியவில்லை..
முதலை: இந்நிலையில்தான, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில், வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடந்த சென்றது.. முதலில் இந்த தகவலை யாரும் நம்பவில்லை.. பிறகுதான் உண்மை என்று உறுதியானது. இத்தனைக்கும் அந்த நேரத்தில், பொதுமக்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்..
அங்குள்ள ஏரி பகுதிகளில் இருந்து முதலை வந்திருக்கலாம் என்று சொன்னார்கள்.. ஆனால், அந்த முதலை ரோடு கிராஸ் செய்து, அந்த பகுதியிலிருக்கும் தண்ணீருக்குள் சென்றுவிட்டது. அதற்குபிறகு வெளியே வரவில்லை.
புறநகர் பகுதி: சென்னையின் புறநகர் என்பதால், முதலை வந்திருக்கக்கூடும். ஆனால், டைடல் பார்க் அருகே கெண்டை மீன் வந்துவிட்டதாம்.. அதுவும் சிக்னலிலேயே இந்த மீன் இருந்திருக்கிறது. சாலையில் கட்டுக்கடங்காமல் ஓடும் மழைநீரில், நீந்தி வந்துள்ளது இந்த மீன்.. அந்த வழியாக சென்ற ஒருவர், உயிருடன் மீன் துள்ளி வருவதை பார்த்து, ஆவலுடன் அதை பிடித்துள்ளார்.
அதற்கு பிறகுதான், அதுகெண்டை மீன் என்றே தெரியவந்துள்ளது.. ஒரே ஒரு மீன் மொத்தம் 2 கிலோ எடை இருந்திருக்கிறது.. அந்த மீன் அப்போதும் உயிருடன் இருந்தது.. வாயை திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தது.
மீன்கள்: இதுகுறித்து அந்த நபர் சொல்லும்போது, இந்த பக்கம் எங்கோ ஏரி இருக்கிறது. அங்கிருந்துதான் மீன் வந்திருக்கிறது.. எனக்கு ஒரு மீன்தான் கிடைத்தது. வேற மீன்கள் கிடைத்ததா என்று யாரும் சொல்ல மாட்டேங்குறாங்க.. இந்த மீனை சமைத்து சாப்பிட போகிறோம் என்றார்.

பிறகு அங்கிருந்த இளைஞர்கள் இதை பற்றி சொல்லும்போது, நாங்கள் இந்த வழியாக வரும்போது,, ரோட்டில் அவர்கள் ஏல்லாம் மீன் பிடித்து கொண்டிருக்கிறார்கள்.. ரோட்டில் தண்ணீர் அதிகமாக இருப்பதால், நிறைய மீன்களும் வந்து கொண்டிருக்கின்றன.. இந்த மழை நின்றதிலிருந்தே இப்படி மீன்கள் வெளியே வந்துகொண்டிருக்கின்றன.
டைடல் பார்க்: ஆனால், டைடல் பார்க் சிக்னலிலேயே மீன்கள் இருப்பதை பார்த்தால் நம்பவே முடியல.. அதுவும் பெரிய பெரிய மீன்களாக வருவதை பார்க்கவே ஆச்சரியமா இருக்கு.. சென்னையில் புயல் வந்தது, ஒருபக்கம் கஷ்டமாக இருந்தாலும், இப்படி ரோட்டிலேயே மீன்களை பிடித்து மக்கள் துள்ளி குதிப்பதை பார்க்க சந்தோஷமா இருக்கு" என்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications