கரையைக் கடந்தது ‘மிதிலி’ புயல்.. வேகம் அப்படியே குறைஞ்சிடுச்சே.. வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்!
டெல்லி: வடமேற்கு வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20 கி.மீ வேகத்தில் நகர்ந்த மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்தது.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிதிலி எனப் பெயரிடப்பட்டது. மிதிலி புயல் இன்று காலையில் ஒடிசாவின் பாரதீப்பிற்கு கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் திகாவிலிருந்து தென்கிழக்கே 200 கி.மீ தொலைவிலும், வங்கதேசத்தின் கெபுபாராவிலிருந்து தென்மேற்கே 220 கிமீ தொலைவிலும் இருந்து வங்கதேசம் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது.

இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் மிதிலி புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (18.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மிதிலி புயல் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் கரையை கடந்தது. 20 கி.மீ வேகத்தில் நகர்ந்த மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையைக் கடந்த மிதிலி புயல், வடக்கு வழகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் திரிபுரா மற்றும் பங்களாதேஷ் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்குச் சென்று வலுவிழக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications