Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடிக்கு நாளை மறுநாள் வருகிறார் மு.க ஸ்டாலின்.. பயண திட்டத்தில் திடீர் மாற்றம் ஏன்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து நேராக தென்மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருவதாக இருந்த நிலையில், நாளை காலை சென்னை சென்றுவிட்டு அதன்பிறகு மாலை தான் நெல்லை வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாளை மறுநாள் ஆய்வு செய்கிறார்.

குமரிக்கடல் மேல் வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத இந்தப் பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. காயல்பட்டினத்தில் நூற்றாண்டு காணாத வகையில் 36 மணி நேரத்தில் 116 செமீ மழை பெய்துள்ளது. அதாவது ஓராண்டு முழுவதும் பெய்யக் கூடிய பெருமழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது.

TN Chief Minister Stalin is coming to Thoothukudi day after tomorrow to review the Flood affect areas

தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரியும், தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும் டெல்லியில் இன்று இரவு பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் நாளை காலை டெல்லியில் இருந்து நேராக தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட இருந்தார். இந்த நிலையில் அவரது பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாளை காலை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அங்கு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு அதன்பின்னர் மாலை நெல்லை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் தூத்துக்குடிக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர் பெருமக்கள் மற்றும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழு தேசிய பேரிடர் மீட்புக் குழு தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் முன்னதாக நாளை தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்த முதலமைச்சர் அவர்கள் மத்தியக் குழு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில்கொண்டு, நாளை இரவு மதுரை சென்று அடுத்த நாள் (21.12.2023) தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார்" என்று தெரிவிக்கப்படுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+