Tap to Read ➤

அடிப்படையான 10 யோக முத்திரைகள்!!

அவைகளின் உடல்நல பயன்கள் என்னென்ன ?
Sidhanathan K
உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியை விட யோகா சிறந்தது.
ஒவ்வொரு யோகா முத்திரையும் தனித்துவமானது. எனவே அவை முறையாகச் செய்யப்பட வேண்டும்.
க்யான் முத்திரை

அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் முத்திரை. ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.
வாயு முத்திரை

உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்தும் முத்திரை. உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வழியை குறைக்க உதவும்.
அக்னி முத்திரை

உடல் எடையை குறைப்பதற்கு முத்திரை. இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.
வருண முத்திரை

உடலில் உள்ள நீர் தனிமத்தை சமநிலைப்படுத்தும் முத்திரை. அழகை மேம்படுத்த இந்த முத்திரை உதவும்.
பிராண முத்திரை

வாழ்க்கையை குறிக்கும் முத்திரை. செரிமான அமைப்பை மேம்படுத்தி, கண்பார்வையின் கூர்மையை அதிகரித்து, சோர்வை எதிர்த்து ஆற்றல் திறனுடன் வைத்திருக்க உதவும்.
ப்ரித்வி முத்திரை

அண்டத்திலுள்ள உலக தனிமத்தை உடலுக்குள் ஊக்குவிக்கும் முத்திரை. இரத்த ஓட்டம் மேம்படும், பொறுமை அதிகரிக்கும், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும்.
சூன்ய முத்திரை

காதுகளுக்கான சைபர் முத்திரை. வயது மற்றும் நோயினால் காது கேட்கும் திறன் குறைபவர்களுக்கு உதவும்.
சூரிய முத்திரை

சூரியனின் ஆற்றல் திறனை அனுசரிக்கும் முத்திரை.சூரியனின் ஆற்றல் திறனை பெறுவதற்கு இந்த முத்திரையை விடியற்காலையில் செய்ய வேண்டும்.
லிங்கா முத்திரை

ஆண்களின் விரைக்குறியை குறிக்கும் முத்திரை. உடலில் ஆண்மையை அதிகரித்து, சளி சம்பந்தப்பட்ட உடல்நல பிரச்சனைகளை போக்கும்.
அபான் முத்திரை

உடலில் உள்ள நச்சுத்தன்மை கலந்த நீரை சுத்தப்படுத்தும் முத்திரை. சிறுநீரக கோளாறுகளை கையாளவும், மலம் கழித்தலையும் சீராக்கும்.