Tap to Read ➤

141 பேரை பலி கொடுத்த 142 ஆண்டுகள் பழமையான மோர்பி பிரிட்ஜ் !!

மோர்பி தொங்கு பாலம் பற்றிய தகவல்கள்..!!
Sidhanathan K
குஜராத்தின் மோர்பியில் உள்ள இந்தப் பாலம் முதலில் பிப்ரவரி 20, 1879 இல் கட்ட துவங்கப்பட்டது.
பணியை அப்போதைய மும்பை ஆளுநர் ரிச்சர்ட் டெம்பிள் தொடங்கி வைத்தார்.
1880ல் சுமார் 3.5 லட்சம் ரூபாய் செலவில் கேபிள் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டன.
142 ஆண்டு பழமையான இந்த கேபிள் பாலம் மொத்தம் சுமார் 765 அடியாகும். இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது.
இந்த பாலம் பழுதடைந்த நிலையில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. புனரமைப்பு பணிக்காக ஏழு மாதங்களாக பாலம் மூடப்பட்டது.
குஜராத் புத்தாண்டையொட்டி அக்டோபர் 26 அன்று புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
மச்சு ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட இந்த கேபிள் பாலம் சமீபத்தில் அறுந்து விழுந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.
அக்டோபர் 30 அன்று 'சத்' பூஜைக்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது குவிந்தனர்.
125 பேரை மட்டுமே தாங்கக் கூடிய பாலத்தின் மீது ஒரே நேரத்தில் 500 பேர் நின்றதால் அவர்களின் எடையை தாங்க முடியாமல் பாலம் 6.42 மணியளவில் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து பாலத்தில் நின்றிருந்த பலர் ஆற்றில் விழுந்தனர்.
இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உள்ளது. மீட்புப் பணிகள் மூலம் 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன் பெறப்பட வேண்டிய தகுதிச் சான்று (Fitness Certificate) பெறப்படவில்லை என்று நகர மன்றத் தலைவர் சந்திப்சின் ஜாலா தெரிவித்துள்ளார்.
மோர்பி தொங்கு பாலம் புனரமைக்கப்பட்ட பின்னர் குறித்த நிறுவனம் தரச்சான்றிதழ் எதனையும் அரசிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும், அரசிடம் உரிய அனுமதி பெறாமல் பாலம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி பாலத்தின் நிர்வாகக் குழு மீது ஐபிசியின் 304, 308 மற்றும் 114 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீஸார் 8 பேரை கைது செய்துள்ளனர்.
விபத்து நடந்த சமயத்தில் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே பாலத்தை மிதிப்பது, குழுங்க வைப்பது என ஆபத்தான செயல்களில் ஈடுபட்டதாக விபத்தில் தப்பியவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அவ்வாறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது போல வீடியோ ஒன்று வைரல் ஆகிக்கொண்டிருக்கின்றது.