Tap to Read ➤

எலான் மஸ்க் கையில் ட்விட்டர்! நடந்தது  என்ன

World's richest man Elon Musk struck a deal to buy Twitter for $44 billion
HTML Tamil
1 140 எழுத்துகளில் அனைத்து கருத்துகளையும் கூறிவிட வேண்டும் என்ற ட்விட்டரின் கான்செப்ட் உலக அளவில் செம ஹிட் அடித்தது.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, இந்தியா என பல நாடுகளும் ட்விட்டருடன் மோதல் போக்கை கொண்டுள்ளது
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார்.
சமீபத்தில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பங்குகளை 5% இல் இருந்து 9.2% சதவிகிதமாக உயர்த்தி, போர்ட் உறுப்பினராகும் வாய்ப்பை பெற்றார்.
இருப்பினும், போர்ட் உறுப்பினர் ஆக மறுத்த எலான் மஸ்க், சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார்.
முதலில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியைத் தடுக்க முயன்ற போர்ட் உறுப்பினர்கள், பின்னர் இறங்கி வந்தனர்,
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 37 பில்லியனாக இருக்கும் நிலையில், அதை 44 பில்லியனுக்கு எலான் மஸ்க் வாங்க உள்ளார்
ட்விட்டர் போர்ட் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒரு ஷேரை இந்திய மதிப்பில் ரூபாய் 4120 ரூபாய்க்கு எலான் மஸ்க் வாங்குகிறார்.
இதன் மூலம் தற்போது பொது நிறுவனமாக உள்ள ட்விட்டர் நிறுவனம், விரைவில் எலான் மஸ்கின் தனிநபர் நிறுவனமாக மாற உள்ளது.