உரல்ல இடிச்ச நாட்டு கோழி ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா?
இதோ ருசியான ரசம் செய்முறையும் நன்மைகளும் பாருங்க!
varalakshmi n
நாட்டு கோழியை நல்லா சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி
உரல்ல இடிச்சு வெச்சுக்கோங்க
தேவையான அளவு- மிளகு, ஜீரகம், பூண்டு, இஞ்சி, வர மிளகாய், கருவேப்பில்லை, தக்காளி
எல்லாம் அம்மியில் அரைத்து கொள்ளவும்...
மண் செடியில் எண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை ஒவ்வொன்றாய் சேர்த்து வதக்கி,இடிச்ச நாட்டு கோழியை சேர்த்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், போட்டு சிறிது நேரம் கழித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
நாட்டு கோழி ரசம் மசாலாவுடன் கொதிக்கும்போது மிக அருமையான வாசனை பசியை தூண்டும்
நாட்டு கோழி நன்றாக வெந்தபிறகு பதம் பார்த்து கொத்தமல்லியை தூவி இறக்கி, ரசம் மட்டும் தனியாக எடுத்துகொள்ளவும்
இறக்கிய நாட்டு கோழியை வேறு கடாயில் பொதுவான செய்முறையுடன் சிறிது மசாலாவுடன் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும்
நாட்டு கோழி ரசம் நெஞ்சு சளி, எலும்புமுறிவுக்கு சால சிறந்த நாட்டு மருந்தாக பயன்படுகின்றது