Tap to Read ➤

2023-ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளின்  அட்டவணை வெளியீடு...!

2023 ஜனவரி 16-ல் ஆஸி ஓபன்  தொடங்குகிறது.
HTML Tamil
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ATP பைனல்ஸ் தொடர், இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடருக்குப் பின்னர் நடப்பு ஆண்டில் முக்கிய தொடர்கள் ஏதுமில்லை. 2023-ல் ஜனவரிதான் முக்கிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டில் நடைபெறவுள்ள 4 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஜனவரி 16 முதல் 29-ம் தேதி வரை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
2-வது கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன், மே மாதம் 28-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை பாரீஸ் நகரில் நடைபெற உள்ளது.
கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் முக்கியமானதாக கருதப்படும் விம்பிள்டன் தொடர், ஜூலை 3 முதல் 16-ம் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது.
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.
2023-ம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி 1-ம் தேதியே, முதல் போட்டியாக அடிலெய்டு ஒபன் டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது.
இதுதவிர, கத்தார், துபாய், மாட்ரிட், இத்தாலி ஓபன், மியாமி, இண்டியன் வேல்ஸ் உள்ளிட்ட ATP மற்றும் WTA தொடருக்கான அட்டவணையும் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்ற சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடருக்கான அட்டவணை, இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.