Varalakshmi N       Mar 09, 2026

முடி உதிர்வை நிறுத்தும் 3 எளிய குறிப்புகள்!

இன்றைய வாழ்க்கை முறையில் மன அழுத்தம், தூக்கமின்மை,  மாசு போன்ற  காரணங்களால் பலருக்கும் முடி உதிர்வு அதிகமாகிறது. இதை எளிதில்  கட்டுப்படுத்த சில இயற்கை முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

தேங்காய் பாளை எடுத்து கொண்டு உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்தால், முடியின் வேர்கள் பலப்படும்

நெல்லிக்காய் சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் சம அளவில் கலந்து, ஷாம்பு போல பயன்படுத்தினால் முடி வலிமையாகும்

கொத்தமல்லி தழையை அரைத்து அதன் பச்சை சாற்றை தலையில் தடவி, அடிக்கடி தலை குளித்தால் முடி உதிர்வு குறையும்

வாரத்திற்கு 2-3 முறை தலை குளித்து தலையை சுத்தமாக வைத்தால் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம், மேலும் முடி அடர்த்தியாக வளர உதவும்