கருவேப்பிலை மற்றும் மிளகு சேர்ந்து செய்யப்படும் இந்த குழம்பு சுவையுடன் ஆரோக்கியத்தையும் தரும். குறிப்பாக காய்ச்சல், சளி போன்ற சமயங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை – 2 கப், மிளகு – 1½ ஸ்பூன், சீரகம் – ½ ஸ்பூன், சிவப்பு மிளகாய் – 8, புளி – சிறிய உருண்டை, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
புளியை நன்றாக கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும். வரமிளகாய், மிளகு, சீரகம், கருவேப்பிலையை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 2 டேப்ளேஸ்பூன் நெல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். அரைத்த மசாலாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் சேர்த்து ஊற்றவும்
குழம்பு பாதியாக கெட்டியாகவும் வரவு நன்றாக கொதிக்க விடவும். இந்த குழம்பை 3-4 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.