பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு பொடுகு, சூடான, குளிர்ச்சியான காலநிலை மாற்றங்கள், மேலும் சூடான நீரால் தலைக்கு குளிப்பது முக்கிய காரணங்கள் ஆகும்
பொடுகை போக்க சில எளிய வழிகளை இங்கு பார்ப்போம்
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு கலந்து தலையில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊறிய பின்னர் அலசலாம்
சிறிது வெந்தயம், நெல்லிமுள்ளி, 5 மிளகு இவற்றை ஊற வைத்து மை போல் அரைத்து தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து அலச வேண்டும்
1 1/2 கப் வெள்ளை வினிகரில் 2 கப் நீரை கலந்து தலைமுடியை அலச வேண்டும். வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்த பொடுகு தொல்லை நீங்கும்
தேவையான அளவு முல்தானி முட்டி நீரில் கலந்து தலையில் தடவி நன்கு உலர்ந்த பின்னர் தலையை அலச வேண்டும். விரைவில் பொடுகு தொல்லை மறையும்