Varalakshmi N       Jan 19, 2026

அடுப்பறையில் அசத்தும் 5 அற்புத யுக்திகள்!

அன்றாட சமையலில் சிறிய யுக்திகள் சரியாக பயன்படுத்தினால், உணவில்       சுவையும் தரமும் பல மடங்கு உயரும்.

சில பயனுள்ள மற்றும் எளிதான சமையல் குறிப்புகள் இங்கே பார்க்கலாம்

முட்டை வேகவைக்கும்போது உடையாமல் இருக்க, தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் , முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதங்கள் விரைவாக உறைந்து       உடைத்தல் குறையும்

முட்டை பொடிமாஸ் செய்யும்போது சிறிதளவு மீல் மேக்கர் சேர்த்தால்       பொடிமாஸ் மேலும் சுவையாக இருக்கும்

சாம்பார் போடி அரைக்கும்போது, சிறிது கல் உப்பை சேர்த்து அரைத்தால் பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும், பூச்சிகளும் வராது

சாம்பார் அதிமாக புளித்தால் சிறிதளவு வெள்ளம் சேர்த்தால் புளிப்பு       சுவை உடனடியாக சமநிலையாகி சுவை கூடும்

பாயாசம் செய்யும்போது திராட்சைக்கு பதிலாக 2 பேரீச்சம்பழங்களை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து  சேர்த்தால் பாயாசம் மிக சுவையாகவும் இனிப்பாகவும் இருக்கும்

சமையல் எளிதாகவும் உணவுகள் அதிக சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்