AI-IMAGE
வெயில் காலம், அதிக உடற்பயிற்சி அல்லது அதிக வியர்வை காரணமாக உடலில் எலக்ட்ரோலைட்கள் குறையலாம்.
அதனால் உடலின் நீர்ச்சத்து சமநிலையை பராமரிக்க எலக்ட்ரோலைட்கள் நிறைந்த பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இளநீர்: பொட்டாசியம் மற்றும் இயற்கை எலக்ட்ரோலைட்கள் நிறைந்த இளநீர், உடலை உடனடியாக புத்துணர்ச்சியாக்கும்.
மோர்: கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் கொண்ட மோர், உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.
எலுமிச்சை உப்பு ஜூஸ் : எலுமிச்சை,உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தயாரிக்கும் இந்த பானம் உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை மேம்படுத்துகிறது.
தர்பூசணி ஜூஸ்: அதிக நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்ததால் உடல் சோர்வை குறைக்க உதவுகிறது.
ORS : உடலில் இழக்கும் சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்களை மீண்டும் நிரப்ப உதவுகிறது.
உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். சரியான பானங்களை தேர்வு செய்து குடிப்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.