Varalakshmi N       Mar 23, 2023

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!

இயற்கையாகவே எல்லா வித மரம், அதின் பூ, காய், பழம், வேர், இலை என       அனைத்து பாகங்களே பயன்படுகூடியதாகவும், மருத்துவ குணம் உள்ளதாகவும் இருக்கும்

அப்படி பட்ட ஒரு விஷேஷ மரம் தான் இந்த வாழை மரம், இதில் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ பயன்கள் உள்ளது

பசியின்மை உள்ளவர்கள் அடிக்கடி வாழை இலையில் சாப்பிட்டுவந்தால், பசி உணர்வை தூண்டி, நன்கு சாப்பிட உதவும்

வாழை இலையில் உள்ள குளோரோபில் என்னும் வேதிப்பொருள், சாப்பிட உணவை  நன்கு செரிக்க உதவி செய்து வயிறு சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது

தினமும் மூன்று வேலை வாழை இலையில் சாப்பிட்டால், சருமத்தில் ஏற்படும்  நீர் வறட்சியை போக்கி,  இளமை தோற்றத்தை தரும்

வாழை இலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது, உணவில் இருக்கும்       நுண்கிருமிகளை அழித்து, உணவு மூலம் ஏற்படக்கூடிய தொற்று வராமல்       பாதுகாக்கிறது

வாழை இலையில் சாப்பிட்டுவர, நம்முடைய கண்களில் இருக்கும் நீர்       திசுக்களில் நீர் தன்மை குறையாமல் பாதுகாக்கிறது