Varalakshmi N       Jan 08, 2024

அடிக்கடி வயிற்று வலி வருவதற்கு 5 முக்கிய காரணங்கள்!

சிலருக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதற்கு முக்கிய காரணங்களும், வலியை போக்க வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம்

புகையிலை, மற்றும் அடிக்கடி காபி குடிப்பதன் காரணமாக இரைப்பையில் புண்  உண்டாகி வலி ஏற்படும், இதற்கு பாசிப்பருப்பு, கேரட், வெந்தயக்கீரை  ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆறும்

மது போன்றவற்றை அதிகமாக அருந்தினால், குடல் பகுதிகளில் வயிற்று வலி  ஏற்படும், பொடுதலை, கரிசலாங்கண்ணி, ஓரிதழ்த் தாமரை, கீழாநெல்லி ஆகிய  மூலிகைகளை 3 மாதம் வரை சாப்பிட்டு வர குணமாகும்

உடலில் அதிக உஷ்ணம் காரணமாகவும், காலந்தவறிய உணவு பழக்கத்தால் வயிற்று வலி ஏற்படும், எலுமிச்சம்பழ சர்பத் குடித்தால் வலி நீங்கும்

வயிற்றில் புண் இருந்தால், அடிக்கடி வலி உண்டாகும், இதற்கு பிரண்டை உப்பு தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்

பெண்களுக்கு மாத விலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு முருங்கை ரசம் சாப்பிட குணமாகும்