Sidhanathan K       Aug 21, 2024

சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய 5 பொருட்கள்..!!

நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை ஆபத்து என்பதால் சர்க்கரைக்கு பதிலாக குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட சில இயற்கை ஆதாரங்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்டீவியா இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. இது கலோரி இல்லாதது மற்றும் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

ஸ்டீவியா

மாங்க் பழத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற இந்த ஸ்வீட்னர் இரத்த சர்க்கரையை உயர்த்தாத பூஜ்ஜிய கலோரியை கொண்டது.

மாங்க் ஃப்ரூட் ஸ்வீட்னர்

நீலக்கத்தாழைச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கை இனிப்பு சுவையுடைய இது சர்க்கரையை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனை மிதமான அளவு பயன்படுத்த வேண்டும்.

நீலக்கத்தாழை தேன்

தேங்காய் பனை சாறில் இருந்து தயாரிக்கப்படக்கூடிய இது வழக்கமான சர்க்கரையை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது.

நாட்டு சர்க்கரை

யாக்கோன் கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட இது இரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

யாக்கோன் சிரப்