Varalakshmi N       Feb 21, 2026

அழகாக 5 எளிய ரகசியங்கள்..!

அழகு என்பது வெளிப்புற தோற்றம், உடல்நலமும் சரியான பராமரிப்பும் சேர்ந்ததே உண்மையான அழகு. சில இயற்கை முறைகளை தொடர்ந்து பின்பற்றினால் இயற்கையான அழகை  பெற முடியும்

முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய சிறிதளவு கிளிசரினை பன்னீரில் கலந்து தினமும் இரவில் படுக்கைக்கு முன் தடவி கொண்டால் முக சுருக்கம் மறைந்து  முகம் பளபளப்பாகவும் இளமையாகவும் மாறும்.

கண்களின் கருவளையம் தோன்றுவது இரத்தம் கெட்டிருப்பதே முக்கிய காரணம். தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்து கொள்வது நல்லது

பித்த கோளாறு காரணமாக தலை நரைத்திருந்தால் கறிவேப்பிலையை தேங்காய்  எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தினமும் தலைக்கு தடவி வந்தால் நரை அகலும்

ஈரல் சூப் சாப்பிடுவது இரத்தத்தை அதிகரிக்க உதவும், இதனால் உதடுகளின் நிறம் மெருகேறி அழகாக தோன்றும்

கோடைகாலத்தில் தினமும் அல்லது வாரத்தில் 2 முறை குளிப்பதற்கு முன்னால்  வெள்ளரிக்காயை அரைத்து உடல் முழுவதும் பூசி 10 நிமிடம் கழித்து குளித்தால்  உடல் குளிர்ச்சியடைவதோடு சருமமும் பட்டுபோல மிருதுவாகும்

இயற்கை முறைகள் உடலுக்கு பாதிப்பு இல்லாமல் அழகை மேம்படுத்த உதவுகின்றன,  சரியான பராமரிப்புடன் பின்பற்றினால் இயற்கையான அழகு நீடிக்கும்