Sidhanathan K       Oct 15, 2024

மெலனின் உற்பத்தியை அதிகரிக்க மற்றும் நரை முடியை தடுக்க உதவும் 5 சூப்பர் புட்ஸ்..!!

மெலனின் என்பது தோல், முடி மற்றும் கண்களுக்கு நிறத்தை கொடுக்கும் நிறமியாகும். மேலும், இது புற ஊதா கதிர்களில் இருந்து முடியை பாதுகாக்க உதவுகிறது.

அந்தவகையில், ஆரோக்கியமான முடியை பராமரிக்க மெலனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம்.

தலைமுடிக்கு மெலனின் உருவாக்கத்தை அதிகரிக்க பாதாம், வேர்க்கடலை, மாட்டிறைச்சி கல்லீரல் மற்றும் வெள்ளை காளான்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தாமிரம் அதிகம் உள்ள உணவுகள்

கேரட்டில் அதிக அளவில் காணப்படும் பீட்டா கரோட்டின், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மெலனின் உருவாவதை ஊக்குவிக்கிறது.

கேரட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி, சி, டி மற்றும் ஈ ஆகியவை மெலனின் உருவாவதை ஊக்குவிப்பதன் மூலம் நரை முடி வருவதை தாமதப்படுத்துகிறது.

டார்க் சாக்லேட்

புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் முடி முன்கூட்டி நரைப்பதை தடுக்க தேவையான வைட்டமின் ஈ அவகேடோவில் ஏராளமாக உள்ளது.

அவகேடோ

வைட்டமின் பி12 சப்ளிமெண்ட் அதிகம் உள்ள மீன், கோழி, பன்றி இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களை எடுத்துக்கொள்வது மன அழுத்தத்தால் ஏற்படும் நரை முடியை தடுக்க உதவும்.

வைட்டமின் பி12