வீட்டை எப்போதும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.
வெள்ளிப்பாத்திரங்களை கழுவும்போது தண்ணீரில் சிறிது பாலை கலந்து கழுவினால், பாத்திரம் மின்னும்
வெள்ளிச்சாமான்களுக்கு பற்பசையை தடவி மெல்லிய துணியால் துடைத்தாள் பாலிஷ் போட்டதுபோல் அழகாக ஜொலிக்கும்
சோப்பு பெட்டிக்குள் சிறிய துண்டு பஞ்சை வைத்தால், சோப்பு விரைவில் கறையாமல் நீண்ட நாள் இருக்கும்
படிக்கும் புத்தகத்தில் எண்ணெய் கறை பட்டுவிட்டால், அந்த இடத்தில் டால்கம் பவுடர் தூவி மெல்லிய துணியால் துடைத்தால் எண்ணெய் கறை மறைந்துவிடும்
கிட்சனில் இருக்கும் மரச்சாமான்கள் பளிச்சென்று இருக்க, மண்எண்ணெய், நல்லெண்ணெயை சமமாக கலந்து துணியால் துடைத்தால் பளபளப்பாக இருக்கும்
ஃபிளாஸ்க்கில் உள்ளே இருக்கும் கறை நீங்க, தண்ணீரில் வாஷிங் சோடா கலந்து ஊற்றி நன்கு குலுக்கி, பின்பு சுடுநீரில் கழுவினால் ஃபிளாஸ்க் சுத்தமாகும், துர்நாற்றமும் போய் விடும்
ஃபிளாஸ்க்கின் துர்நாற்றம் நீங்க, மோரில் சிறிது உப்பு சேர்த்து ஃபிளாஸ்க்கில் ஊற்றி அடங்கு குலுக்கி, பின்னர் சாதாரண நீரால் கழுவினால் துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்
இந்த எளிய டிப்ஸ்களை தினசரி வாழ்க்கையில் கடைப்பிடித்தால், வீடு சுத்தமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்