Tap to Read ➤

ரிலீசுக்கு முன்பே 24 விருதுகளை வென்ற 52 நிமிட தமிழ் திரைப்படம்!!

கூடிய விரைவில் வெளியாகும் பைலட் ஃபிலிம் ..!!
Sidhanathan K
இந்த உலகில் எல்லாவற்றையும் விட ஒரு உயிரின் மதிப்பே உயர்ந்தது என்பதை உணர்த்தும் விதத்தில் உருவான 24 விருதுகளை வென்ற தமிழ் திரைப்படம் "21 கிராம்ஸ் பிலாசபி".
Auraz Pictures & Cult squad film தயாரித்து யான் சசி இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் மோகனேஷ், பூ ராமு மற்றும் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக நடிகர் மோகனேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் படத்திலேயே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 7 சிறந்த நடிகர் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
52 நிமிடம் ஓடும் இந்தப் படம் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
சவுந்தர்ராஜான், அன்பு டென்னிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விஜய் சித்தார்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழா, தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழா, ரோம், டோக்கியோ, அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழா என உலகம் முழுவதும் 24 விருதுகளை இப்படம் வென்றுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் விரைவில் தமிழ் மக்களால் பார்க்கப்படவுள்ளது.