Varalakshmi N       Jan 31, 2026

 இரத்தச் சோகைக்கு தீர்வாகும் சுவைமிக்க ஈரல் வதக்கல்..!

ஈரல்  புரதச்சத்து நிறைந்தது. எளிதில் செரியக்கூடிய ஒரு ஆரோக்கிய உணவு.இந்த உணவு இரத்த சோகைக்கு மிக சிறந்த தேர்வாகும்

சுவைமிக்க ஈரல் வதக்கல் எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்

தேவையான பொருட்கள்: ஈரல்  -1/4 கிலோ, வெங்காயம் -2, மிளகு -     தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன், நல்லெண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு, கறிவேப்பில்லை 1 கொத்து

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மிளகு சீரகம் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். ஈரலை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்

வாணலியில் நெல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பில்லை மற்றும்     நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

அதில் நறுக்கிய ஈரல், அரைத்த மிளகு சீராக தூள் மஞ்சள்தூள் மற்றும்     தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

அதை மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும். ஈரல் தன் சாற்றிலேயே     விரைவாக வெந்து நிறம் மாறும் ஈரல் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த இந்த ஈரல் வதக்கல் சாதம் அல்லது     சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்