Varalakshmi N       Jul 13, 2023

சென்னை இசிஆர் சாலையில் டபுள் டக்கர் மாடி பஸ் வரப்போகுது!

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது

கடந்த 2008ஆம் ஆண்டு டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில்,  பல்வேறு மேம்பாலங்கள், மற்றும் போக்குவரத்துக்கு நெரிசல் காரணமாக இந்த சேவை  நிறுத்தப்பட்டது

தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டபுள் டக்கர் பஸ்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது

சென்னையில் சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இந்த சேவையை கொண்டு வர ஆய்வு செய்து வருகிறது

டபுள் டக்கர் பஸ் மிக உயரமாக இருப்பதால் எந்த வித பாதிப்பும் இல்லாமலும்,  குறுகலான சாலை, கேபிள் ஒயர்கள் இல்லாத பாதைகளை கணக்கிட்டு, பஸ்களை இயக்க  ஆய்வு செய்து வருகின்றனர்

அதன்படி, இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் பஸ் ரூட்கள் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வருடத்தில் செப்டம்பர், அல்லது அக்டோபர் மாதத்திலிருந்து  சென்னையில் டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது