Tap to Read ➤

படுத்தவுடன் நிம்மதியாக தூங்க சில எளிய டிப்ஸ்!

இரவில் குறைந்தப்பட்சம் 8 மணி நேரம் உறங்குவது மிகவும் அவசியம்.
HTML Tamil
சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். ஒரு சிலர் புரண்டு புரண்டு படுத்தாலும் இரவில் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி முதல் 8 மணி நேரம் வரை இரவில் தூங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இப்போதெல்லாம் பலரும் தங்களது கவலைகளை நினைத்து இரவில் தூக்கமில்லாமல் தவிக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.
இரவில் தூங்கச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.
இரவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படாது.
இயற்கையாகவே சிறந்த தூக்கத்தை தரக்கூடிய வாழைப்பழத்தை இரவில் உண்டால், நல்ல தூக்கம் வரும்.
இரவில் பசும்பால் குடிக்கலாம். ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை நறுக்கி ஒன்றாக கலந்து, சாலட் செய்து சாப்பிடலாம்.
தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது தேன் கலந்து இரவில் குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
தூங்கச் செல்வதற்கு முன்பு, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளித்தால், ஆழ்ந்த தூக்கம் வரும்.
படுக்கை அறைக்குச் செல்லும்போது, உடலில் தளர்வான ஆடைகளை அணிந்து கொள்வது மிகவும் நல்லது.
மனதிற்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது அல்லது இனிமையான பாடல்களை கேட்பது போன்றவையும், தூக்கத்தை வரவழைக்கும்.
தூங்குவதற்கு முன்பாக, மனதை ஒருநிலைப் படுத்தும் வகையில் தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.