Tap to Read ➤

உயில் எழுதும்போது கவனத்தில் வைக்க வேண்டிய சில விஷயங்கள் !!

உயில் (Will) எழுதுவது என்றால் என்ன ?
Sidhanathan K
பொதுவாக ஒருவரின் சொத்து அவரது மரணத்திற்குப் பிறகு அவரது வாரிசுகளுக்குச் செல்கிறது.
ஆனால் உயில் அப்படியல்ல. ஒருவரது சொந்தச் சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துக்களை அவர் வாரிசுகளுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் எழுதிக் கொடுக்கலாம்.
அவ்வாறு வாரிசு தவிர மற்றவர்களுக்கு எழுதினால் வாரிசுகள் எதிர்க்க முடியாது. எனவே உயில் என்பது யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம்.
உயில் எழுதுவதன் நோக்கம், ஒருவர் இறந்த பிறகு அவருடைய சொத்து யாருக்கு சேர வேண்டும் என்பதுதான்.
ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே உயில் எழுத முடியும். அனைத்து சொத்துக்களையும் உயில் அளிக்க முடியாது.
அதாவது தந்தை வழியில் வந்த பூர்வீக சொத்துக்கு உயில் எழுதி வைக்க முடியாது.
வாரிசுகளுக்கு உயில் எழுதப்பட்டால் மனைவி எந்த வகையிலும் சொத்திற்கு உரிமை கோர முடியாது. அதேபோல், உயிலில் மனைவி பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால் வாரிசுகள் உரிமை கோர முடியாது.
எனவே ஒருவர் சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு உயில் எழுதி வைப்பதாக இருந்தால் மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதுவது நல்லது.
ஆகவே உயில் எழுதும்போது யாருக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் எழுதலாம். அவ்வாறு உயில் எழுதும்போது இரண்டு சாட்சி கையொப்பம் இருக்க வேண்டும்.
சாட்சி கையெழுத்திடும் நபர் உயிலின் பயனாளியாக இருக்கக்கூடாது. அவ்வாறு செய்வதால் உயில் பலனளிக்காமல் போகலாம்.
உயில் எழுதியவுடன் பதிவு செய்வது மற்றும் பதிவு செய்ததை நகலெடுத்து ஒன்றை ரெஜிஸ்டர் அலுவலகத்தில் கொடுப்பது நல்லது.
பெருநகரங்களில் எழுதப்பட்ட உயில்கள் அனைத்தும் அந்த நபரின் மரணத்திற்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம், ஆனால் கடைசியாக எழுதிய உயில் மட்டுமே தகுதியானது.