Sidhanathan K       Apr 24, 2023

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் ரூ.10000 அபராதம்..!!

ஆதார் அட்டை அடையாள அட்டை என்பது போல, பணப் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியமாகும்.

அனைத்து வங்கி கணக்குகள் மற்றும் வருமான வரி கணக்குகளுடன் பான் எண் இணைக்கப்பட்டிருக்கும்.

பான் கார்டு மூலம் நம் வரவு செலவுகள் மற்றும் மொத்த பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகிறது.

வருமான வரித்துறை விதிமுறைகளின்படி, தனிநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 272B-ன் கீழ், தகவல் தொழில்நுட்பத் துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த பிரிவின் கீழ், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கும் நபருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories