Varalakshmi N       Jun 19, 2026

இரத்த சோகைக்கு இயற்கை தீர்வா? மலை வாழைப்பழத்தின் அசத்தல் பலன்கள்!

AI-IMAGE

மலை வாழைப்பழம் மற்ற வாழைப்பழ வகைகளைக் காட்டிலும் தனித்துவமான சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்துகளால் சிறப்புப் பெறுகிறது.

விலை சற்று அதிகமாக இருந்தாலும், இதில் உள்ள மருத்துவ குணங்கள் உடல்நலத்தையும், தோற்றப் பொலிவையும் மேம்படுத்த உதவுகின்றன.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் இரண்டு முறை காலை அல்லது  இரவு உணவுக்குப் பிறகு மலை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த  விருத்திக்கு உதவலாம்.

அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொண்டால் ஜீரணத்திற்கு உதவக்கூடும்.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.

வாரத்தில் 2 முதல் 3 முறை அளவோடு சாப்பிட்டாலே இதன் நன்மைகளைப் பெற முடியும்.

வாதநோய் அல்லது குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மலை வாழைப்பழம் சுவை மட்டுமல்லாமல், பல்வேறு ஊட்டச்சத்துகளையும் கொண்ட ஆரோக்கியமான பழமாகும்.

அளவோடு உணவில் சேர்த்துக்கொண்டால் உடல்நலம், ஆற்றல் மற்றும் இயற்கையான அழகை மேம்படுத்த உதவும்