Tap to Read ➤

76,000 யுஎஸ் டாலருக்கு ஏலம் போன ஜீன்ஸ் பேண்ட்!

Levi's நிறுவத்தின் பழமையான ஜீன்ஸ் பேண்ட் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு பிரமிக்க வைத்துள்ளது.
HTML Tamil
கடந்த 1880-ம் ஆண்டில் பிரபல Levi's நிறுவனம் தயாரித்த ஜீன்ஸ் பேண்ட் ஒன்று, அமெரிக்காவில் உள்ள சுரங்கம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
மெக்சிகோவில் Levi's நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதுதான் இந்த பழமையான ஜீன்ஸ் பேண்ட்.
1880-களில் தயாரிக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த இந்த ஜீன்ஸ் பேண்ட், நியூ மெக்சிகோவில் ஏலம் விடப்பட்டது.
மிகவும் அரிதான விண்டேஜ் லெவியின் இந்த ஒரு பாக்கெட் பக்கிள் பேக் ஜீன்ஸ் பேண்ட் 76,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.
சான்டியாகோவைச் சேர்ந்த ஆடை சேகரிப்பு ஆர்வலர் Kyle Haupert என்ற பழங்கால ஆடை சேகரிப்பு ஆர்வலர் இந்த ஜீன்ஸ் பேண்ட்டை ஏலம் எடுத்துள்ளார்.
இதன்மூலம் பழைமையான பொருளுக்கு எப்போதுமே மவுசு உண்டு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.