Tap to Read ➤

துணிகளை அழகாக மடித்து வைக்கும் ரோபோ!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த நவீன ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
HTML Tamil
ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விதவிதமான ரோபோக்களை உருவாக்கி வருகின்றனர்.
மனிதர்களுக்கு உதவும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் இத்தகைய ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, துணிகளை வேகமாகவும், அழகாகவும் மடிக்கும் புதிய ரோபோவை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
துணி துவைக்கும் நேரத்தை குறைக்க வாஷிங் மெஷின் தயாரிக்கப்பட்டு, துவைத்த துணிகளை உலர வைக்க, பின்னர் டிரையரும் உருவாக்கப்பட்டது.
உலர்ந்த துணிகளையும் சரியாகவும், வேகமாகவும் மடிச்சு வைக்க தற்போது புதிய வகை ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா Berkeley பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய அதிநவீன ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
'Speed Folding' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, மனிதர்களை விட பலமடங்கு விறுவிறுப்பாக செயல்படுகிறது.
ஒரு மணி நேரத்தில் 30 முதல் 40 வரையிலான துணிகளை அழகாகவும், ஒழுங்காகவும் மடித்து வைத்து, அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது.
BiManual Manipulation Network எனப்படும் நரம்பியல் வலையமைப்பை பயன்படுத்தி துணிகைளை அழகாக இந்த ரோபோ மடித்து வைக்கிறது.
இத்தகைய ரோபோக்கள், வீட்டுக்கு பயன்படுகிறதோ இல்லையோ, ஜவுளி கடைகளில் உபயோகிக்கப்படுத்த அதிகம் வாய்ப்பு உள்ளது.