குறைந்த பொருட்களிலேயே சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த எளிய மீன் உணவு தான் சீலா மீன் ரோஸ்ட். இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சிறப்பு ரெசிபி
தேவையான பொருட்கள்: சீலா மீன் - 1/4 கிலோ, மிளகாய் வற்றல் -10, எலுமிச்சை பழச்சாறு -1/2 மூடி, மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன், நெல்லெண்ணெய் -பொரிக்க தேவையான அளவு, உப்பு தேவையான அளவு
சீலா மீனை நன்றாக சுத்தம் செய்து வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். மிளகாய் வற்றலை மையாக அரைத்து, அதில் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் எலுமிச்சை பழசாறு சேர்த்து கலக்கவும்
இந்த மசாலாவில் வெட்டிய மீன் துண்டுகளை சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்
பின்னர் ஒரு கடாயில் மீன் முழுகும் அளவிற்கு நெல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த மீன் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவப்பாக பொரித்து எடுக்கவும்
தயாரான சுவையான சீலா மீன் ரோஸ்ட்-ஐ சாம்பார், அல்லது ரசத்துடன் பரிமாறலாம்