Varalakshmi N       May 27, 2026

ஞாயிறு விருந்துக்கு சூப்பரான மட்டன் தாள் ரெசிபி ...!

AI-IMAGE

காரசாரமான மசாலா மணமும், மட்டனின் நறுமணமும் கலந்து தயாராகும் “மட்டன் தாள் குழம்பு” சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இந்த பாரம்பரிய ரெசிபி அனைவரையும்  கவரும்.

தேவையான பொருட்கள்: கொத்துக்கறி – ½ கிலோ, கடலைப்பருப்பு – 200  கிராம், கறி மசாலா பொடி – 1 தேக்கரண்டி, கிராம்பு – 4, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், மிளகாய் வற்றல் – 10, கொத்தமல்லி – 1தேக்கரண்டி, மல்லித்தழை – சிறிதளவு

பெருஞ்சீரகம் – ½ தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, கசகசா – 1 தேக்கரண்டி தேங்காய் துண்டுகள் – 4, புளி – 1 கொழிக்குண்டு அளவு, நல்லெண்ணெய் – 4 கரண்டி, உப்பு – தேவையான அளவு,

செய்முறை: இஞ்சி, பூண்டு, கிராம்பை நன்றாக இடித்து       வைத்துக்கொள்ளவும். மிளகாய் வற்றல், கொத்தமல்லி, சீரகம்,       பெருஞ்சீரகம், கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

தேங்காயை தனியாக நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். புளியை கரைத்து       வைத்துக்கொள்ளவும். கடலைப்பருப்பு மற்றும் கொத்துக்கறியை தனித்தனியாக       வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, இடித்து வைத்த இஞ்சி-பூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து, மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

அதன்பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும். வேக வைத்த கறி மற்றும் கடலைப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு போடவும். புளிக்கரையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

குழம்பு சற்று கெட்டியாகி எண்ணெய் பிரியும் நிலையில் வந்ததும்       மல்லித்தழை தூவி இறக்கவும்.