Tap to Read ➤

மூலிகை வகைகளில் ஒரு அற்புத மருத்துவகுணம் நிறைந்த குப்பைமேனி…!

குப்பைமேனியின் வீட்டு வைத்தியம் !!
Sidhanathan K
குப்பைமேனி ஒரு கீரை வகை. வெளி உபயோகம் மட்டும் அல்லாது உள்மருந்தாகவும் பயன் தரக்கூடியது.
சித்த மருத்துவ இலக்கியத்தில் 'அரிமஞ்சரி' என்று பேசப்படும் இந்த மூலிகை, நோயை ஆற்றுவதிலும், வராது தடுப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
குப்பைமேனி இலையை உலர்த்தி பொடியாக்கி மூக்கில் தடவ தலைவலி நீங்கும். அல்லது முப்பைமேனி இலையை சாம்பிராணியுடன் அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி உடம்பில் தடவி வந்தால் உடல் வலி நீங்கும்.
குப்பைமேனியின் உலர்ந்த பொடியை ஒரு கிராம் வெந்நீரில் அல்லது தேனில் கலந்து கொடுக்க, இருமல் உடனடியாகக் கட்டுப்படும்.
குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயம் பட்ட இடங்களுக்கு தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
குழந்தைகளுக்கு, ஒரு டீஸ்பூன் குப்பைமேனி இலைச்சாறை மூன்று நாட்கள் மாலையில் கொடுக்க புழுத்தொல்லை தீரும்.
குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து பாலில் 1 ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டால் நெஞ்சு வலி நீங்கும்.
குப்பைமேனி இலையை சாறு பிழிந்து நல்லெண்ணெய் காய்ச்சி கால் மூட்டில் தேய்த்து வர மூட்டு வலி குணமாகும்.
மூல நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை துவையலாக செய்து சாப்பிட்டுவர மூல நோய் குணமாகும்.