Tap to Read ➤

முகத்தில் தாடியுடன் இருக்கும் இளம் பெண் !

அமெரிக்க பெண்ணுக்கு ஆண்களைப்போல் முகத்தில் தாடி வளர்கிறது.
HTML Tamil
அமெரிக்காவின் Las Vegas-ஐ சேர்ந்த Dakoto Cooke என்ற பெண்ணுக்கு, 13 வயதிலேயே முகத்தில் முடி வளர தொடங்கியுள்ளது.
ஆண்களைப் போல அசாதாரண முடி வளர்ச்சி, Dakoto Cooke-வுக்கு பெரும் சங்கடத்தை கொடுத்து வந்துள்ளது.
இதற்காக தினமும் 2 முறை ஆண்களைப்போல Dakoto Cooke-வும் ஷேவ் செய்து வந்துள்ளார்.
மேலும், முகத்தில் உள்ள முடியை நிரந்தரமாக நீக்க, வாரம்தோறும் முகத்திற்கு வேக்சிங் செய்தும் வந்துள்ளார் Dakoto Cooke.
அடிக்கடி ஷேவிங் மற்றும் வேக்சிங் செய்ததால், Dakoto Cooke-க்கு முகத்தில் வடுக்கள் மற்றும் தடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
முகத்தில் உள்ள தடுப்புகளை மேக்கப் செய்து Dakoto Cooke மறைத்து வந்துள்ளார்.
எனினும் இதில் எந்த பயனும் கிடைக்காததோடு, ஒரு கட்டத்தில் முகத்தில் நீண்ட தாடியாக வளரத் தொடங்கியது.
பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்ட போதிலும், முகத்தில் வளரும் முடிக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
அட்ரீனல் சுரப்பிகள் அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்வதால், முகத்தில் முடி வளர்வதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.
ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த Dakoto Cooke, முகத்தில் தாடி வளர்வதை பற்றி கவலைப்படாமல் இருக்க முடிவு செய்துள்ளார்.
இதற்கு Dakoto Cooke குடும்பத்தாரும், அவரது நண்பர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இதனையடுத்து, தனது முகத்தில் ஆண்களைப் போல தாடி வளர்வதை Dakoto Cooke மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளார்.