Sidhanathan K       Nov 02, 2023

பாலில் எவ்வளவு கொழுப்பு இருக்கணும்.. ஆவின் வெளியிட்ட அறிவிப்பு..!

மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் ஆவின் நிறுவனம், டிலைட் பால், டயட் மில்க் மற்றும் பிரீமியம் பால் என மூன்று வெவ்வேறு நிறங்களில் பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பசும்பாலில் சராசரியாக 3% முதல் 4% கொழுப்பு மற்றும் 7.5% முதல் 8.5% மற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதன் அடிப்படையில் 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் கொண்ட ஆவின் டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், டிலைட் பாலில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டுள்ளது. இந்த வகை பால் பயன்படுத்துபவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

அதேபோல், 1.5% கொழுப்பு மற்றும் 8.5% மற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட, குறைந்த கொழுப்புள்ள டயட் பால் இளஞ்சிவப்பு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

மேலும், 6.0% கொழுப்பு மற்றும் 9.0% மற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள பிரீமியம் பால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், தேவைக்கேற்ப இந்த வகை பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories