Tap to Read ➤

நடிகை சமந்தாவை பாதித்த மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய்!!

அறிகுறிகள் எப்படி இருக்கும்?.. அதை தடுக்க வழிகள் உள்ளதா?
Sidhanathan K
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் சில தினங்களுக்கு முன் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல போராட்டமான நாள்களைக் கடந்து தற்போது முழுமையாக குணமடையும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சமந்தா பகிர்ந்துள்ள இந்த மயோசிடிஸ் என்று அழைக்கப்படும் தசை அழற்சி நோய் என்றால் என்ன? இதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்று பலரும் யோசித்து வருகின்றனர்.
'மையோ' என்றால் தசை. மயோசிடிஸ் என்பது தசையின் வீக்கத்தைக் குறிக்கிறது. இது ஒரு பரவலான பிரச்சனை அல்ல. இது ஒப்பீட்டளவில் அரிதான நிலை.
இது பொதுவாக கை தசைகள், தோள்பட்டை, கால்கள், இடுப்பு, அடிவயிற்று தசைகளைத்தான் தாக்கும்.
இந்த நோய் தாக்கினால், காய்ச்சல், எடை குறைப்பு, மூட்டு வலி, மயக்கம், தசைகளில் கடுமையான வலி உருவாகும்.
நோயின் ஆரம்ப கட்டங்களில் பாதிக்கப்பட்டவர் எழுந்து நடக்கவே சிரமப்படுவார்.
நோய் கடுமையாக இருந்தால் படுக்கையில் தூங்கும் நிலையை மாற்றுவதில் கூட சிரமம் ஏற்படலாம்.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இந்த பாதிப்பு உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் சுவாச மண்டலத்தை பாதித்து சுவாச பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
ஒரு சாதாரண வைரஸ் தொற்றால் ஏற்படும் இருமல், சளி கூட ஒரு வகையான தசை அழற்சி நோயை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதாம்.
இது காய்ச்சல், எச்.ஐ.வி தொற்று மற்றும் இதய நோய் மருந்துகளால் ஏற்படலாம். இது ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு காரணமாகவும் ஏற்படலாம்.
இந்த மயோசிடிஸ் நோயை தடுக்க எந்த வழியும் இல்லை. இதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பாதிப்பின் தீவிரத்தை குறைக்க சில நேரங்களில் ஸ்டெராய்டுகள் மற்றும் நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் தேவைப்படுகின்றன.
மயோசிடிஸ் வகையைப் (3 வகைகள்) பொறுத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை தவிர பிசியோதெரபி, யோகா, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் போன்றவையும் தேவைப்படலாம்.
அமெரிக்காவில் 50,000 முதல் 75,000 பேர் வரை மயோசிடிஸ் நோயுடன் வாழ்வதாகவும், குறிப்பாக பெண்களை இந்நோய் அதிகமாக தாக்குவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மது மற்றும் கோகயின் உட்கொள்வதைத் தவிர்ப்பது மட்டுமே ஒருவர் எடுக்கக்கூடிய தடுப்பு நடவடிக்கைகள்.
தசை அழற்சி நோயை தடுக்க முடியாது என்றாலும் சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.