Tap to Read ➤

குழந்தைகளுக்கு டயப்பர் அணிவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள்!!

குழந்தைக்கு எப்பொழுதும் டயப்பர் அணிவிப்பவரா நீங்கள்?.. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காக!!
Sidhanathan K
குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், டயப்பர்களை எந்நேரமும் குழந்தைகளுக்கு அணிவித்து விடுகின்றனர்.
அடிக்கடி ஆடையை மாற்ற வேண்டாம் எனும் வசதிக்காக சிலர் டயப்பர்களை பயன்படுத்துகிறார்கள்
தங்கள் வசதிக்காக அடிக்கடி டயப்பரை மாற்றுவதில் கவனம் செலுத்துபவர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தவறுவது ஏன்?
டயப்பர்களை அதிக நேரம் அணிவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், டயப்பரில் கலந்துள்ள 'ப்தாலேட்' என்ற ரசாயனம் குழந்தையின் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற தொற்று நோய்கள், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
டயப்பரில் சிறுநீரை உறிஞ்ச, சோடியம் பாலி அக்ரிலேட் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. கூடவே, நறுமணத்துக்காகவும் சில வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.
குழந்தைகளின் மேனி மென்மையாக இருக்கும். இறுக்கமான டயப்பரை அணிவதால், குழந்தைகளின் உடலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காது.
குழந்தைகளின் சிறுநீர் டயப்பரில் நீண்ட நேரம் தங்குவதால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவும் இதுவே காரணம். இந்த எரிச்சல் காரணமாக சில நேரங்களில் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள்.
இவ்வாறு தொடர்ந்து டயப்பர்களை அணிவது குழந்தைகளின் கழிப்பறை பயிற்சியை கெடுக்கும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதாவது 24 மணி நேரமும் டயப்பரில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் சிறுநீர் வருவதை பெற்றோருக்கு உணர்த்த தெரியாது.
டயப்பர் போட்டிருப்பதாக எண்ணி இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை அடக்குவது போன்ற தவறுகளை செய்யத் தொடங்குகிறார்கள்.
ஒரு முறை கழற்றிய டயப்பரை குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை என்று சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே டயப்பரை பயன்படுத்த கூடாது.
டயப்பரைப் பயன்படுத்துவதில் மிக முக்கியமான விஷயம், அதைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது. குழந்தைகள் நடமாடும் இடங்களில் அப்படியே கழற்றி வீசுவது சுகாதாரமானதல்ல.