வரலாற்று மிக்க பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் உறவுமுறை!!
கல்கி எழுதிய சரித்திர நாவலின் கதைமாந்தர்கள் !!
Sidhanathan K
இது கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றிலுள்ள பல உண்மையான கதாபாத்திரங்கள் மற்றும் சில கற்பனை கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனையான தமிழ் நாவல்.
பொன்னி(நதி)யின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று.
இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அருள்மொழிவர்மன் - சோழ இளவரசர். ராஜராஜ சோழன்
வல்லவரையன் வந்தியத்தேவன் - வாணர்குல இளவரசன். ராஜராஜ சோழனின் நண்பன்
குந்தவை - ராஜராஜ சோழனின் தங்கை. வந்தியத்தேவனின் காதலி
ஆதித்த கரிகாலன் - பட்டத்து இளவரசர். ராஜராஜ சோழனின் சகோதரர்
வானதி - குந்தவையின் தோழி. ராஜராஜ சோழனின் முதல் மனைவி
பெரிய பழுவேட்டரையர் - தஞ்சை கோட்டைத்தலைவர். அரசருக்கு அடுத்த இடத்தில் வலிமையான அதிகாரத்தில் இருப்பவர்.
சின்ன பழுவேட்டரையர் - பெரிய பழுவேட்டரையரின் தம்பி.