Tap to Read ➤

கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய அனுமதி!!

IRCTC-இன் இந்த அறிவிப்பு யாருக்கெல்லாம் பொருந்தும் ?
Sidhanathan K
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலில் பயணம் செய்வதையே தேர்வு செய்கிறார்கள்.
அதற்கான ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடினம். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளும் கூட வெயிட்டிங் லிஸ்டில் தான் இருக்கும்.
அதிலும் பண்டிகைக் காலங்களில் சொல்லவே வேண்டாம் ரிக்கெட் கிடைப்பது எளிதான காரியமில்லை.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம்.
கன்ஃபார்ம் செய்யப்படாத டிக்கெட்டுகளில் இனி பயணம் செய்யலாம் என்று IRCTC அறிவித்துள்ளது.
டிக்கெட் சாளரத்தில் (Ticket window) வாங்கிய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதை காண்பித்து ரயிலில் பயணிக்கலாம்.
இந்த சலுகையானது ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு பொருந்தாது.
ஆன்லைனில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் தவிர, பயணிகள் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாறாக டிக்கெட் விலை திருப்பித் தரப்படும்.