Sidhanathan K       Apr 26, 2024

உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு உதவும் கற்றாழை..!!

இயற்கையாக வளரும் கற்றாழைக்கு உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் உண்டு. கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன.

அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பதில் கற்றாழை பெரிதும் உதவுகிறது. முகச்சவரம் செய்த பின் சருமத்தை புத்துணர்வுடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க கற்றாழையை பயன்படுத்தலாம்.

சருமத்தில் உண்டாகும் தடிப்புகள், காயங்கள் மற்றும் கட்டிகள் போன்ற பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.

கற்றாழை முகத்தை பளபளப்பாக வைத்திருக்கவும், கரும்புள்ளிகளை நீக்கவும் உதவுகிறது. புறஊதா கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாப்பதோடு, வியர்க்குருவை போக்குகிறது.

கற்றாழை, ஆஸ்துமா, குடல் புண் போன்ற நோய்களுக்கு ஒரு நல்ல மருந்தாகும். தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து சருமத்தை பாதுகாக்கிறது.

தலைமுடியை வேரிலிருந்து வலுப்படுத்தவும், மென்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சரியான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

தீராத வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கற்றாழைச் சாறு அல்சர், மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் இதர செரிமான கோளாறுகளை தீர்க்க உதவுகிறது.

தீக்காயத்தினால் ஏற்பட்ட புண்ணை ஆற்றும் தன்மை இந்த கற்றாழைக்கு உண்டு.

கற்றாழைச்சாறை தினமும் 2 முறை தலையில் தடவி வந்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories