Varalakshmi N       Jan 25, 2025

 அகம் நோய் தீர்க்கும் அகத்தி கீரையின் அற்புத பலன்கள்!

அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் இதில் இருப்பதால், இதற்கு அகத்தி கீரை என்ற பெயர் வந்தாக கூறப்படுகிறது

இதில் 50 கும் மேற்பட்ட சத்துகள் உள்ளது. இரண்டு வகையான அகத்தி கீரை, ஒன்று வெள்ளை நிற பூக்கள் கொண்டது, மற்றொன்று சிவப்பு நிற பூக்கள் கொண்டது

குழந்தைகளுக்கு பல் வளர்ச்சிக்கும், உடல் பலம் பெறவும் இந்த இக்கீரையை சமைத்து உண்டபின், செரிமானம் மெதுவாக இருக்கும், எனவே குழந்தைகள், பெரியவர்கள் மத்திய உணவில் மட்டும் சேர்த்துக்கொள்வது நல்லது

தேமல், மற்றும் சொரியாசிஸ் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இக்கீரையை மைய அரைத்து, தேமல், சொரியாசிஸ் உள்ள இடத்தில் தடவி வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய வாய்ப்புண்டு

பித்தம், உடல் சூடு, மூளை சம்பந்தமான பகுதியில் கோளாறு, அறிவு ஆற்றல் மற்றும் நியாபக குறைவுக்கு அடிக்கடி உணவில் சாப்பிட்டுவந்தால்,     இப்பிரச்சனையிலிருந்து பூரண குணமடையலாம்

அகத்தி கீரையின் பூக்களை கண்களில் வைத்து சிறு துணி வைத்து     கட்டிக்கொண்டால், கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கி, நல்ல தெளிவான பார்வை கிடைக்கும்