Varalakshmi N       Oct 06, 2023

வாழவைக்கும் வாழை மரத்தின் அருமையான நற்பலன்கள்..!

வாழை இலையில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது, பித்தத்தால் ஏற்படும் கோபத்தை தணித்து, பசியின்மை  பிரச்சனையை சீராகும்

வாழைப் பூவின் சாற்றை தயிருடன் கலந்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும்

வாழைப்பூ உணவில் சேர்த்து வர கை, கால், எரிச்சல், இரும்பல் ஆகிய நோய்கள் விரைவில் நீங்கும்

வாழைப்பூ பிஞ்சு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புண், மற்றும் அதிக அளவு சிறுநீர் வெளியேறுதல் தடுக்கும்

வாழைத் தண்டைச் சாப்பிட்டால், குடலில் சிக்கியிருக்கும் முடி, மற்றும் நஞ்சு ஆகியவற்றை வெளியற்றும்

ரத்த சம்பந்தமான நோய்களுக்கு, வாழைத்தண்டு மிகவும் சிறந்த மருந்து