Varalakshmi N       Apr 06, 2024

வறண்ட கருமையான உதட்டை, ரோஜா இதழ் போன்ற அழகான உதடுகளாக மாற, இதை தடவுங்க!

இயற்கையாகவே, மென்மையாகவும், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் உதடுகள் ஆரோக்கியமானவையாகக் கருதப்படுகின்றன

ஆனால் சிலருக்கு உதடுகள் வறண்ட மற்றும் கருமையான நிறத்தில் இருப்பதற்கு  ஊட்டச்சத்து குறைபாடுகள், மற்றும் புகைபிடித்தல் போன்ற பல காரணங்கள் உண்டு

கருமையான திட்டுகள், வறண்டு காணப்படும் உதட்டை, மென்மையான இளஞ்சிவப்பான உதடுகளை பெற இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும்

தினமும் இரவு, ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து, உதடுகளின் மேல் தேய்க்கவும்,  மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும், இப்படி செய்து வந்தால் வறண்ட  கருமையான உதடுகள் மென்மையாக மாறும்

ஒரு டீஸ்பூன் பால், சிறிது மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து, அதை உதடுகளின் மேல் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து, பின்பு குளிர்ந்த நீரில்  கழுவி, தேவைப்பட்டால் மாய்ஸ்சரைசர் தடவிக்கொள்ளலாம்

கற்றாழை ஜெல்லின் மெல்லிய அடுக்கை தினமும் ஒரு முறை உதடுகளில் தடவவும், அது காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

தினமும் இரவு நல்லெண்ணெயை தடவவும் ,உதடுகளில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories