Tap to Read ➤

சுன்னத் செய்வதால் இவ்வளவு நன்மைகளா..??

சுன்னத் செய்வதால் உடலுறவு வாழ்க்கை பாதிக்கப்படுமா?
Sidhanathan K
ஆணுறுப்பு நுனித்தோலின் நுனியை அகற்றுவதே சுன்னத். இஸ்லாமியர்கள் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சுன்னத் செய்யும் முறையை சமய சடங்காகவே பின்பற்றி வருகின்றனர்.
சுன்னத் செய்த ஆணுறுப்பை எளிதில் சுத்தம் செய்ய முடியும். சிறுநீர் கழிப்பதால் ஆணுறுப்பில் சேரும் அழுக்குகள் சுன்னத் செய்திருப்பதால் சேராது.
குறிமெழுகு என்பது ஆண்குறியின் முன் பகுதியில் சேரும் மெழுகு போன்ற ஒன்று. சுன்னத் செய்வதால் இவை ஆண்குறியில் அதிகம் சேருவதில்லை. மேலும் சுன்னத் செய்தவர்கள் இதை சுத்தம் செய்வது எளிது.
சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் தொற்று நோய்கள் ஏற்படுவதில்லை. சுன்னத் தெய்திருப்பவர்களை விட செய்யாதவர்களுக்கு அதிக தொற்று ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறுவர்களுக்கு முன் தோல் குறுக்கம் எனப்படும் பகுதி மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதால் சிறுநீர் அங்கேயே தங்கி நோயினை உண்டாக்கும். சுன்னத் செய்வதால் இவ்வாறு ஏற்படுவதில்லை.
சுன்னத் செய்த ஆண்களுக்கு எய்ட்ஸ், பால்வினை நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று அமெரிக்க நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
புற்றுநோயில் ஆண்குறி புற்றுநோயும் ஒன்று. சுன்னத் செய்தவர்களுக்கு இந்த புரோஸ்டெட் புற்றுநோய் ஏற்படுவதில்லை. மேலும் சுன்னத் செய்தவரின் துணைக்கும் கர்பப்பை வாய் புற்று நோய் ஏற்படுவதில்லை.
சுன்னத் செய்வதால் மொட்டு பகுதி காற்றுபடும் படியான நிலையில் இருப்பதனால் காலப்போக்கில் மொட்டு பகுதி உணர்ச்சியானது குறைய துவங்கி செக்ஸ் உணர்வு ஏற்படாது என்ற கருத்தும் கூறப்பட்டு வருகிறது.
சுன்னத் செய்த ஆண்களின் உடலுறவு சுன்னத் செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில் உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில் சிரமம் இருக்கிறது. ஆணுறுப்பு மொட்டில் மரத்துப் போன உணர்வு இருக்கிறது.
பெல்ஜிய ஆய்வில், பருவமடைந்த பிறகு சுன்னத் செய்யப்பட்ட ஆண்களுக்கு குழந்தை பருவத்தில் சுன்னத் செய்யப்பட்டவர்களை விட குறைவான பாலியல் இன்பம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதன் பின் 2013ல் நடந்த மோரிஸ் ஆய்வறிக்கையில் சுன்னத் செய்து கொள்வதால் பாலியல் உணர்ச்சி, புணர்ச்சி இன்பம், விந்து வெளிவருவது, விறைப்பு என எந்த விதத்திலும் எதிர்மறை பாதிப்புகள் ஏற்படுவது போன்ற தாக்கங்கள் காணப்படவில்லை என கூறப்பட்டது.
இந்த ஆய்வுத் தரவுகளுடன் ஒப்பிடுகையில், முந்தைய ஆய்வுத்தகல்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. பல அடுத்தடுத்த ஆய்வுகள் சுன்னத் செய்வதால் எந்த பாலுறவு செயலிழப்பையும் ஏற்படுவதில்லை என்றே கூறப்பட்டுள்ளன.