Sidhanathan K       Mar 06, 2023

காலையில் காபியுடன் நெய் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

பலருக்கும் பொழுது விடுவதே காபியில் தான். சூடான ஒரு கப் காபியை குடித்த பிறகுதான் புத்துணர்ச்சியுடன் உணர்வார்கள்.

சில இடங்களில், காபியுடன் வெண்ணெய் அல்லது நெய் கலந்து குடிப்பது வழக்கமாக உள்ளது.

மேற்கத்திய நாடுகளில் காபியுடன் வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற MCT (medium chain triglyceride) ஆயில் சேர்த்து தயாரிக்கப்படும் புல்லட் ப்ரூஃப் காபி மிகவும் பிரபலமானது.

சிலருக்கு காபி குடிப்பதால் அசிடிட்டி சிக்கல் ஏற்படலாம். காபியில் நெய் சேர்த்து குடிப்பது இந்த சிக்கலுக்கு எளிய தீர்வாக இருக்கிறது.

உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கும் வேகம் அதிகரிக்கும்.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து மனநிலையை மேம்படுத்துகிறது.

இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகளை வழங்குகிறது.

மூளையை சுருசுற்றுப்பாக வைத்திருக்க உதவி செய்கிறது.

இது உடல் எடையை குறைப்பதில் நல்ல பலனை தரும்.

இது மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகும்.

மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories