Sidhanathan K       Mar 09, 2023

தூங்கும் முன் சுக்கு பொடி கலந்த பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

சுக்கு சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. ஆனால் இந்த சுக்கு பொடியை பாலுடன் கலந்து இரவில் குடிப்பதால் இன்னும் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

தூங்கும் முன் சுக்கு பால் குடித்து வந்தால் தொண்டை வலி மாயமாக மறையும்.

உணவிற்கு பிறகு ஏற்படும் வயிறு உப்புசம் சரியாகும்.

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

சுக்கு பாலில் தேன் கலந்து குடித்து வந்தால், அதன் சத்துக்கள் மேலும் அதிகரித்து, உடலுக்கு அதிக நன்மைகளை தரும்.

வைரஸ் காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தை எதிர்த்து போராட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மூட்டு வலி மற்றும் கீல்வாதம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

சுக்கை தட்டி பாலில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, சிறிது ஆறியதும் குடிக்க தொடர்ந்து விக்கல் வருவது நின்று விடும்.

சுக்குவை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

சுக்கை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு தொல்லை ஏற்படலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories