Sidhanathan K       Jul 20, 2023

பெண்களுக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்தால் அவ்வளவு அதிர்ஷ்டமா?

மச்சம் என்பது ஆண், பெண்ணின் அதிர்ஷ்டம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் இடும் இடத்தில் மச்சம் இருந்தால், உயர் பதவியும், அந்தஸ்தும் உள்ள பணக்கார கணவன் அமைவான்.

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணிற்கு அதிகார பதவி தேடி வரும்.

மூக்கில் எங்காவது மச்சம் இருந்தால், நினைத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டசாலி மற்றும் சிறந்த கணவன் அமைவான் என்று அர்த்தம்.

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் இருக்கும். வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக அனுபவிப்பார்கள்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும்.

நாக்கில் மச்சம் உள்ளவர்கள் கலை ரசனை மிகுந்தவர்கள். இடது தோளில் மச்சம் உள்ள பெண் அபரிமிதமான செல்வத்திற்கு அதிபதியாக இருப்பார். பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இருக்கும்.

இடது மார்பகத்தில் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், வாழ்வில் படிப்படியாக முன்னேறுவார்கள். இடது பக்கம் மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.

வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும். நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் கண்ணுக்குத் தெரியாமல் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் துணிச்சல் இருக்கும். வாழ்க்கை வசதியாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும்.

இடது தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். வலது முழங்காலில் மச்சம் இருந்தால் பிடிவாத குணம் அதிகமாக இருக்கும்.

பிறப்புறுப்பில் மச்சம் உள்ள பெண்ணை விட அதிர்ஷடசாலி யாரும் இல்லை. உயர் பதவிகள் தேடி வரும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories