Tap to Read ➤

நேர்காணலுக்குச் செல்கிறீர்களா..? அப்படியானால் இது உங்களுக்கான பதிவு.!!

இதையெல்லாம் செய்தால் நேர்முகத்தேர்வு வெற்றி தான்..!!
Sidhanathan K
இன்டர்வியூ என்றாலே ஏடாகூடமாக கேள்விகள் கேட்ப்பார்கள், 'இப்படியிருக்கும் அப்படியிருக்கும்' என நமக்கு நாமே ஏதாவது ஒரு கணக்கைப் போட்டு வைத்திருப்போம்.
சில நேர்முகத் தேர்வு நம்முடைய அணுகுமுறை, நேர்மை, மனநிலை ஆகியவற்றை சோதிக்கும் வண்ணமே அமையும். எனவே உற்சாகத்துடன் நேர்மையான மனநிலையுடன் செல்லுங்கள்.
நேர்காணலில் நமது குறைகள் மற்றும் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல நேர்காணலுக்கு தாமதமாக செல்லாதீர்கள். தாமதமாக வருபவர்களை கட்டாயம் ஒரு நிறுவனம் பணியமர்த்தாது.
நேர்காணலுக்குச் செல்வதற்கு முன், நிறுவனத்தின் வரலாற்றைப் பற்றி படிக்கவும். நேர்காணலில் நிறுவனத்தைப் பற்றிய ஏதேனும் கேள்விகள் உங்களிடம் கேட்கப்படலாம்.
முகச்சவரம் செய்து பார்மல் உடையணிந்து நேர்காணல் அறைக்குள் செல்லுங்கள். அவ்வாறு செல்லும்போது எப்பேர்பட்டவராயினும் நன்மதிப்பை பெற முடியும்.
மன தைரியம் மிக முக்கியம். என்ன கேள்வி கேட்பார்களோ என்று பயப்படுவதை விட்டுவிட்டு, எந்தக் கேள்வி கேட்டாலும் என்னால் பதில் சொல்ல முடியும் என்ற மனநிலையை கொண்டு வாருங்கள்.
அதேபோல் கேட்கப்படும் கேள்விக்கு பதில் கூறும்போது, உடல் மொழி (Body language) முக பாவனையுடன் பொருந்துவது போல் இருக்க வேண்டும். கட்டாயம் நெளிந்து கொண்டோ அல்லது நுனிசீட்டில் உட்காருவதையோ தவிருங்கள்.
நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சுற்றி வளைத்து பதிலளிக்காமல் என்ன பதில் தேவையோ அதை பளிச்சென்று சொல்லிவிடுங்கள். பதில் தெரியவில்லை என்றாலும் அதை தைரியமாக சொல்லுங்கள்.
நேர்காணலை முடிக்கும் போது இன்முகத்தோடு முடிக்கவும். நீங்கள் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காததால் முகத்தை சோகமாக வைத்துக் கொள்வதோ, பதட்டத்தை வெளிக்காட்டுவதோ கூடாது.
நேர்காணலில் தோல்வி அடைந்தால் வாழ்க்கையில் தோல்வி அடைந்தது போல் இல்லாமல் "அனுபவமே அற்புதமான ஆசான்" என்பதை மனதில் வைத்து அடுத்த படியை நோக்கி முன்னேறுங்கள்.