Tap to Read ➤

5ஜி போன் வாங்க போறீங்களா..? அப்போ இத தெரிஞ்சிட்டு வாங்குங்க...!!

புதிய மொபைல் வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
Sidhanathan K
இந்தியாவில் 5G சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய 5G ஃபோனை வாங்குவதற்கு முன் சில பியூச்சர்ஸை கருத்தில் கொள்ள வேண்டும்.
தீபாவளி விற்பனையை முன்னிட்டு பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் ஆபர்களை வாரி இறைக்கிறார்கள்.
விலையுயர்ந்த மொபைல் போன் கூட கம்மி விலையில் கிடைக்கிறது.
5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சிப்செட் இருந்தால் மட்டும் போதாது. சிப் மற்றும் ஃபோன் mmWave மற்றும் sub-6GHz ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
mmWave 5G பேண்ட்ஸ் சிறந்த 5G வேகத்தை வழங்கும் திறன் கொண்டவை. sub-6GHz பேண்ட்ஸ் 4G ஐ விட சிறந்த வேகத்தை வழங்குகின்றன.
11 5G பேண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ஆதரிக்கும் மொபைலைத் தேர்வு செய்ய வேண்டும்.
பழைய 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை விட மார்க்கெட்டில் புதிதாக வந்துள்ள 5ஜி மொபைலை தேர்ந்தெடுப்பது முக்கியம்.
5ஜி ஆனது 4ஜியை விட 10 மடங்கு வேகமானது. எனவே பெரிய பேட்டரி திறனை வழங்கும் 5ஜி போனை வாங்க வேண்டும்.
பட்ஜெட் 5ஜி போனை வாங்கும் போது, அதன் டிஸ்ப்ளே, ரெசல்யூஷன், கேமரா சென்சார்கள் போன்றவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
5G தொழில்நுட்பத்திற்கு சிறு சிறு அப்டேட்டுகள் வழங்கப்படலாம். எனவே சாப்ட்வேர் அப்டேட்டுகளை சப்போர்ட் செய்யும் போன் வாங்குவது அவசியம்.