வாழைக்காய் பொடி என்பது சாம்பார், ரசம் அல்லது சாதத்துடன் சேர்த்து சுவையூட்டும் ஒரு எளிய சுவையுள்ள துணை உணவாகும்.
வாழைக்காய் பொடி இதை வீட்டில் எளிதில் தயார் செய்யலாம். செய்முறை விளக்கம் பற்றி இங்கே பார்க்கலாம்
தேவையான பொருட்கள்: வாழைக்காய் -1, சிவப்பு மிளகாய் -5, துவரம் பருப்பு - 1 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன், எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
செய்முறை: வாழைக்காயை இரண்டாக நறுக்கி தண்ணீரில் வேகவைக்கவும். சிறிது எண்ணெயில் மிளகாய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு பொன்னிறமாக வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்
வேகவைத்த வாழைக்காய் தோலை உரித்து பொடியாக செய்துகொள்ளவும். அரைத்த வைத்த பொடியை வாழைக்காயுடன் கலந்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
கடைசியாக எண்ணெயில் கடுகு மற்றும் பெருங்காயத்தை போட்டு தாளித்து சேர்க்கவும். சுவையான வாழைக்காய் பொடி தயார். இதை சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் ருசி இரட்டிப்பாகும்