சிறுநீரக கல் கரைந்து சிறுநீரில் வெளியேற, வாழைத்தண்டு ஜூஸ் அல்லது வாழைத்தண்டு கூட்டு செய்து வாரம் 2 நாள் சாப்பிட்டு வரலாம்
வாழைத்தண்டு ஜூஸ் விரும்பி சாப்பிட முடியாதவர்கள், வாழைத்தண்டு கூட்டு செய்ய செய்முறையை பயன்படுத்தி சுவையாகவும், மணமாகவும், ருசியாகவும் செய்யலாம்
நார் நீக்கிய இளம் வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக்கி, பாசிப் பருப்புடன் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
சிறிது நல்லெண்ணெய் விட்டு வெங்காயம், சீரகப் பொடி, இஞ்சி சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்பை அதனுடன் சேர்த்து, பக்குவத்தில் இறக்கி, தேவைப்பட்டால், மிளகு பொடி தூவி, பகல் உணவில் சாப்பிட்டு வரலாம்
இப்படி வாரம் 2-3 முறை சாப்பிட்டு வர, கல் கரைந்து சிறுநீரில் வெளியேறும்
தவிர்க்க வேண்டிய உணவுகள் தயிர், எலும்பிச்சை, காலிபிளவர், தக்காளி, வெண்ணெய், ஊறுகாய்